காளையர் கோவில்..சாதாரணக் கோவில் அல்ல..தியாகத்தின் நினைவுச் சின்னம்.
மாமன்னர்
மருது பாண்டியர்கள்.,தாங்கள் கட்டிய காளையார் கோவிலுக்கு,சிறப்பான தேர்
ஒன்று செய்ய முடிவு செய்து., அப்பொருப்பை, தலைமைத் தச்சர் குப்பமுத்து
ஆசாரியிடம் ஒப்படைத்தனர். அவரும்., அழகான தேர் செய்து. உலா வரும் நாளும்
முடிவானது. வெள்ளோட்டத்ன் போது மன்னர் தேர் மீது பவனி வருவது மரபு.ஆனால்.,
ஆசாரியோ தேர் செய்தமைக்காக.,மன்னர் பெரிய மருது பாண்டியரிடம்.,இன்று நான்
கேட்பதை தேர் செய்த தட்சணையாகத் தர வேண்டும்,என்றார்..............மன்னரும்
தாங்கள் கேட்பதை மறுக்காமல் தருகிறேன் .,கேளும் என்றார்.,இன்று ஒரு நாள்
நான் மன்னராக தேரில் பவனி வர வேண்டும்.,இதுவே என் ஆசை எனக் கூறிவிட்டுத்
தொழுது நின்றார்.பொது மக்கள்.ஆசாரி மன்னராவதா?ஏற்றுக் கொள்ளமுடியாது எனக்
கூறி சத்தமிட்டனர்.மன்னர் அவர்களைக் கண்டித்து விட்டு..,தன்
கிரீடத்தையும்.,செங்கோலையும்.,குப்பமுத்துவிடம் கொடுத்து விட்டுத் தேரோட்டத்தை நடத்த உத்தரவிட்டார்......மன்னர் ..அமர வேண்டிய இடத்தில்.,குப்பமுத்து..ஆசாரி....தேர் சிறிது தூரம் செல்வதற்குள்.,ஒரு திருப்பத்தில்.,தேர் நிலை குலைந்தது.,தடுமாறியது..எங்கும்
குழப்பம் .. சத்தம்..என்னவென்று பார்த்தால்..தேர் மீது மன்னராக அமர்ந்த
ஆசாரி கீழே விழுந்து விட்டார்..என மக்கள் ஓடினர்,மருது பாண்டியரும்.
விரைந்து வந்து பார்த்த போது.,அழகான தேர் செய்த குப்பமுத்து ஆசாரி.தேர்
சக்கரத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்., ஆனால்..முகத்தில்
புன்னகை.,மருது பாண்டியர் ஆசாரியை எடுத்து தங்கள் மடியில் கிடத்தி உயிரைக்
காப்பாற்ற முயன்றனர்.ஆனால் ஆசாரியோ., மன்னா..நான் பிழைக்க
மாட்டேன்.,ஏனென்றால் தேர் நிர்மாணித்தைக் கணித்த போதே.,மன்னராய்
இருப்பவர்...... இறப்பார். எனத் தெரிந்து கொண்டேன்,நீங்கள் கொண்டிருக்கும்
அளவற்ற பக்திக்கு தேர் செய்தேஆக வேண்டும் ஆனால்.எனக்கோ.நீங்கள்., நலமுடன்
வாழ்ந்து.,இந் நாட்டு மக்களைக் காக்க வேண்டும்..என்பதற்க்காக என் உயிரை
உங்கள் காலடியில் காணிக்கை ஆக்குகிறேன்.எனக் கூறி.. குப்பமுத்து ஆசாரி தன்
உயிரை..மருது பாண்டியருக்காக..விட்டார்., பிற்காலத்தில்
வெள்ளையரை..எதிர்த்துப் போரிட்டு..காளையார் கோவில் தகர்க்கப் படக் கூடாது
என்பதற்காக..மாமன்னர் மருது பாண்டியர்கள்., தூக்குக் கயிற்றை..ஏற்று உயிர்
துறந்தனர்...காளையர் கோவில்..சாதாரண க் கோவில் அல்ல..தியாகத்தின் நினைவுச்
சின்னம்.
No comments:
Post a Comment