"வானுலகம் மிஞ்சும் மருதுபாண்டியரின் புகழை என்றும் மறக்கவும் முடியாது ,அழிக்கவும் முடியாது, வாழ்க மருது புகழ்"

Thursday, 6 September 2012

ராஜராஜ சோழன் ஆவணப்படம்



இராஜராஜ சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவராவார்.'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவரது மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.

இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.

இவர் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவரது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டார். இவர் ஆட்சியின் மூன்றாம் ஆண்டு முதலே ராஜ ராஜ சோழன் எனப்பட்டார்.  (988) தந்தை இறந்ததும் இவர் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவர் காலத்திலும் இவரது மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராஜராஜனின் காலம்பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.

ராஜராஜ சோழன் பற்றிய ஆவணப்படத்தை கீழ காணலாம்.அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று.

பகுதி-1

http://www.youtube.com/watch?v=SnANjdReAlY

 பகுதி-2
http://www.youtube.com/watch?v=yJomuGsi2fU

 பகுதி-3

http://www.youtube.com/watch?v=za6nYK4L9ns

 பகுதி-4
http://www.youtube.com/watch?v=c2a0GcoJAjw

 பகுதி-5
http://www.youtube.com/watch?v=hkCjoSJpkJ8


ராஜராஜ சோழன்  திரைப்படம்
http://www.youtube.com/watch?v=H6pdkm8iv1c

No comments:

Post a Comment